பொதுவாக அனைவருமே தங்கள் மனதுக்கு பிடித்தவர்கள் தங்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் தங்கள் சொல்வதை கேட்க வேண்டும் எனவும் நினைப்பது மிகவும் சாதாரணமான விடயம் தான்.

ஆனால் அவ்வாறான ஒரு துணை கிடைப்பது தான் அசாத்தியமானது. மனதுக்கு பிடித்தவரை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றுவது சுலபமான விடயம் கிடையாது. அப்படி மாற்ற வேண்டும் என நினைத்தால் அதனை அதிகாரத்தால் ஒரு போதும் செய்யவே முடியாது என்பது உறுதி.

இதற்கு முதலில் எந்தவிதமான எதிர்ப்பார்ப்பும் அற்ற தூய்மையான அன்பு முக்கியம். ஆனால் அந்தளவு பொறுமையும் அன்பும் இந்த காலத்தில் யாரிடமும் இருப்பது கிடையாது. எனவே காதல் விடயததில் ஒருபோதும் செய்யக்கூடாத விடயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

முதல் பார்வையிலேயே காதல் என்பது சினிமாவில் பார்ப்பதற்கு வேண்டுமானால் உண்மை போன்று இருக்கலாம். ஆனால் நிஜ வாழ்வில் ஒருவரை பற்றி முழுமையாக தெரிந்துக்கொண்ட பின்னர் காதல் கொள்வதே சரியானதாக இருக்கும். முதல் பார்வையிலேயே காதல் கொள்ளும் தன்மை மிகவும் ஆபத்தில் முடியும்.

தீவிர ஆர்வம்
குறிப்பிட்ட சிலர் பழகி 10 நாட்களுக்குள்ளேயே நீ தான் என் உயிர், நீ இல்லாத வாழ்க்கை நினைத்துக்கூட பார்க்க முடியாது என கதைவிட ஆரம்பித்துவிடுவார்கள்.ஆங்கிலத்தில் அது Love Bombing என அழைக்கப்படுகின்றது. இப்படிப்பட விடயங்கள் உண்மையான காதலாக இருக்க முடியாது.

தியாகம்:
சிலர் பார்த்த உடனேயே காதல் கொண்டு அவர்களுக்காக எதை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள தயாராகிவிடுவார்கள். ஆனால் இப்படி தங்களின் சந்தோஷத்தை கட்டுப்படுத்திக்கொண்டு நீண்ட நாட்கள் வாழ முடியாது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

சண்டைகள்:
உறவுகளுக்கிடையில் சண்டைகள் ஏற்படுவது சகஜமான விடயம் தான் ஆனால் சில காதலர்கள் இடையில் எதை பேசினாலும் சண்டை வந்துவிடும் என்ற பயம் அதிகமாக இருக்கும். இப்படியான மனநிலை இருந்தால் உடனடியாக அந்த உறவில் இருந்து வெளியேறுவதே நிறந்தது.

சந்தேகம்
சில காதலர்களிடையில் ஆண்கள் எல்லா பெண்களிடமும் பேச கூடாது, பெண் எல்லா ஆண்களிடமும் பேச கூடாது என்ற கட்டுப்பாடான மனநிலை இருக்கும்.அது நீண்ட காலத்துக்கு ஒத்துவராது. இந்த கட்டுபாடுகள் காலப்போக்கில் சந்தேகத்தை தூண்டி உறவையே அழித்துவிடும். காதவில் ஒருபோதும் இந்த தவறை செய்யக்கூடாது.