Sunday, October 4, 2026|
Home/Local/தங்கப்பிரியர்களுக்கு வெளியான முக்கிய செய்தி.!

தங்கப்பிரியர்களுக்கு வெளியான முக்கிய செய்தி.!

E
Editor
|16 September 2026 at 12:38

Gold Price Today : செப்டம்பர் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.இன்றைய (செப்டம்பர் 16) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நேற்று (செப்டம்பர் 15) 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,040 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,12,320 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.14,065 ஆக உள்ளது. இதேபோல், ஒரு சவரன் 22 காரட் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.1,12,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலையிலும் இன்று உயர்வு பதிவாகியுள்ளது. அதன்படி, ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ.11,835 ஆகவும், ஒரு சவரன் ரூ.200 உயர்ந்து ரூ.94,680 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மறுபுறம், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி தொடர்ந்து ரூ.250க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags:Local