Sunday, October 4, 2026|
Home/Politics/நாமலுக்கு மீண்டும் சிறை! சற்று முன்னர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நாமலுக்கு மீண்டும் சிறை! சற்று முன்னர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

E
Editor
|16 September 2026 at 11:46

புதிய இணைப்பு

எதிர்வரும் 23ஆம் திகதி வரை நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.

மூன்றாம் இணைப்பு

சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமான கொள்முதல் வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்றுமுன்னர் சிறை அதிகாரிகளால் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று (16) கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.