Tuesday, May 26, 2026|
Home/Local/தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு வெளியான மிக முக்கிய செய்தி..!!

தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு வெளியான மிக முக்கிய செய்தி..!!

A
Admin
|28 April 2026 at 13:25

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (28) வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 397,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று அதன் விலையில் 2,000 ரூபாய் குறைவடைந்துள்ளது.அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 395,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 363,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,425 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

உலக சந்தையில் நிலவும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டிலும் இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Tags:Local