இன்றைய தங்க நிலவரம்..!! வெளியான முக்கிய செய்தி.!
E
Editorகடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்வடைந்த தங்கத்தின் விலை இன்று சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.அதன்படி, நேற்றுடன் (28) ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலையில் 3000 ரூபாய் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் நிலவும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டிலும் இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாவுக்கும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,600 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிாாம் 49,000 ரூபாவுக்கும் 22 கரட் தங்கம் ஒரு கிராம் 45,075 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
Tags:Local





