Friday, July 3, 2026|
Home/Local/கொழும்பில் நடந்த சம்பவம் ஒருவர் கைது.!

கொழும்பில் நடந்த சம்பவம் ஒருவர் கைது.!

E
Editor
|18 June 2026 at 13:30

கொழும்பு - ரத்மலானை பகுதியில் வீடு புகுந்து திருட்டுகளில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவர், மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, மொரட்டுமுல்ல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு நேற்று புதன்கிழமை (17) கிடைத்த ரகசியத் தகவலொன்றின் அடிப்படையில், ரத்மலானை பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சந்தேகநபர் குறித்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், அவர் மொரட்டுமுல்ல மற்றும் பிலியந்தலை பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.


இதன்போது, சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட ஒரு கைத்தொலைபேசி, 25 செப்புக்குழாய்கள், தங்க வளையல் ஒன்றை அடகு வைத்தமைக்கான பற்றுச்சீட்டு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. மொரட்டுமுல்ல பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடபட்டு வருகின்றனர்.  

Tags:Local