Tuesday, May 26, 2026|
Home/Local/பால் தேநீர் விலை அதிகரிப்பு..! இலங்கையில்.!

பால் தேநீர் விலை அதிகரிப்பு..! இலங்கையில்.!

E
Editor
|20 May 2026 at 16:13

பால் தேநீர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று(20.05.2026) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.  

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்பு இன்று காலை வெளியாகியிருந்த நிலையில்,  தற்போது தேநீரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும்  400 கிராம் பால் மா பக்கெட்டின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,  ஒரு கிலோ கிராம் பால் மா பக்கெட்டின் விலை 125 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Tags:Local