Tuesday, May 26, 2026|
Home/Local/இலங்கையில் புதிதாக வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி செய்தி..!! சடுதியாக அதிகரித்த வாகன விலை.!

இலங்கையில் புதிதாக வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி செய்தி..!! சடுதியாக அதிகரித்த வாகன விலை.!

E
Editor
|16 May 2026 at 06:22

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்குரிய சுங்க இறக்குமதி வரியின் மீது 50% மேலதிக வரியை விதிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்கள் மீது விதிக்கப்பட்டு வந்த 30% சுங்க இறக்குமதி வரியின் மீது கூடுதலாக 50% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கூடுதல் 50% வரி இன்று (16) முதல் மூன்று மாத காலத்திற்கு விதிக்கப்பட உள்ளது.

இருப்பினும், மே 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கடன் கடிதங்கள் பெறப்பட்ட வாகனங்களுக்கு இந்த புதிய 50% சுங்க வரி பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:Local